அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, ஆழ்துளை தண்ணீர், ஆற்றுக் குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுசாமி பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதில் மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.