Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு மற்றும் நாய்ககளை வேட்டையாடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை சார்பாக கூண்டு வைத்தும் அது சிக்கவில்லை. இந்நிலையில் நெய்தாளபுரத்தை புரத்தைச் சேர்ந்த சாந்தப்பா என்பவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

இதனையடுத்து சாந்தப்பா அங்கு ஒரு பகுதியில் ஓரமாக உட்கார்ந்து விட்டார். அதன்பின் மாலை வேளையில் ஆடுகள் திடீரென அடித்துப் பிடித்து ஓடுவதை கண்டு சாந்தப்பா எழுந்து பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை வேட்டையாடுவதை கண்டு சாந்தப்பா அதிர்ச்சியடைந்தார். இதனைதொடர்ந்து சாந்தப்பாவின் கூச்சல் சத்தம் கேட்டு சிறுத்தை ஆட்டை விட்டுவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையால் வேட்டையாடப்பட்ட ஆட்டை பார்வையிட்டனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |