Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முஸ்லீம் பண்டிகையை முன்னிட்டு” அடித்து பிடித்து வாங்கினர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஆடுகளை வியாபாரிகள் அடித்துப் பிடித்து வாங்கி சென்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த சந்தையில் கருவாடும், ஆடுகளும் வியாபாரிகளுக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றது. இதனால் சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து பெரும்பாலான ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முந்தைய வாரச்சந்தை செஞ்சியில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் செஞ்சியில் நடைபெற்ற வாரச்சந்தையில் விற்பனைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டது. இதனை வாங்குவதற்காக 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு வந்தனர். இவ்வாறு காலை 4 மணியில் இருந்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வாரச்சந்தை கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதில் வியாபாரிகள் அடித்துப்பிடித்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலமாக 4 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |