தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘ஆதித்ய வர்மா’. இந்தப் படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இவருடன் பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘E4 என்டெர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இதன் டீசர், பாடல்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
இப்படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன் இந்தக் கதையை ‘வர்மா’ என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கினார். அது தயாரிப்பாளர் தரப்புக்கு திருப்தி இல்லாததால், கிரீசாயாவை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள்.
#AdithyaVarma Trailer – https://t.co/wM39JgfVA0@DhruvVikram8 @BanitaSandhu @GIREESAAYA @dop007 @PriyaAnand @follow_anbu @sureshrajan @radhanmusic @Lyricist_Vivek @proyuvraaj @sooriaruna @DhruvVikramFans @chiyaanCVF @adityamusic @e4echennai @cvsarathi @10gMedia pic.twitter.com/JXBPfudQEd
— E4 Entertainment (@E4Emovies) October 22, 2019
#AdithyaVarma Audio Jukebox – https://t.co/AxTQm0xfgJ
@DhruvVikram8 @BanitaSandhu @GIREESAAYA @dop007 @PriyaAnand @follow_anbu @sureshrajan @radhanmusic @Lyricist_Vivek @proyuvraaj @sooriaruna @DhruvVikramFans @chiyaanCVF @adityamusic @e4echennai @cvsarathi @10gMedia pic.twitter.com/Z3mEqg1qAj— E4 Entertainment (@E4Emovies) October 22, 2019