Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு இப்படி காதலன் வேண்டாம்” ஆதித்யா வர்மா கதாநாயகி OPEN TALK….!!

ஆதித்யா வர்மா திரைப்படம் குறித்து அப்படத்தின் கதாநாயகி பனிடா கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியான இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தை ரீமேக் ஆக கொண்டு எடுக்கப்பட்டதாகும். ரீமிக்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று பலரும் கூறி வந்த நிலையில் இது அசாத்திய வெற்றி பெற்று பெரும் வரவேற்கத்தக்க விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதுகுறித்து பல திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த பனிடா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆதித்யா வர்மா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆதித்யா கதாபாத்திரம் போல் தனக்கு காதலன் வேண்டவே வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணமாக அவர் தொடர்ந்து பேசுகையில்,

அதிக கோபம் கொண்டவனால்  அவனுக்கும் அவனைச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்படும் காயங்கள் குறித்தும் வலிகள் குறித்தும் இந்த படத்தில் விரிவாக எடுத்து கூறியுள்ளோம். ஆகையால் இதில் கோபம் அதிகம் கொள்ளக் கூடாது என்பதற்கான ஒரு விழிப்புணர்வு படமாகத்தான் எடுக்கப்பட்டதே தவிர அந்த கதாபாத்திரத்தை கொண்டாடுவதற்காக எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |