மக்களவையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு மசோதா , அணைகள் பாதுகாப்பு மசோதா , தேசிய மருத்துவ கமிஷன் , காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா என பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்ற பட்டது. பாரதீய ஜனதா கூட்டணிக்கு மக்களவையில் மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால் கூச்சல் குழப்பம் ரகளை என்றெல்லாம் இருந்தாலும் மசோதாக்கல் அதிகளவில் நிறைவேற்ற பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத் தொடர் இரவு 10 மணிக்குப் பிறகுகூட அமர்வை நடத்தி விவாதம் நடத்த ஒப்புதல் அளித்து வெற்றிகரமான ஒரு கூட்டத் தொடராக இருந்ததாக சபாநாயகர் குறிப்பிட்டார். இந்நிலையில் ஆகஸ்டு 7 வரை பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.