இலங்கையை சேர்ந்த ஏடிகே 2012 ஆம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற ஆல்பம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு முதல் முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனி இசையில் பாடினார். இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கு இதுதான் முதல் சினிமா பாடல். அதன் பிறகு பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது யுவன், ஹரிஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய பலரின் இசையிலும் பாடல்களை பாடி வருகிறார்.
இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் மற்றொரு போட்டியாளராக இருக்கும் மைனா நந்தினியின் சொந்த மாமா மகன் ஆவார். ADK ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபியான் என்ற மகன் இருக்கிறார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் ஏடிகே தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் ஏடிகேயின் முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.