புதிய பாடத்தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 15ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு, அரசியாண்டு தேர்வுகள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் 11ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை பள்ளிகள் தொடங்கிவிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து உரிய அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
500 மதிப்பெண் கொண்ட புதிய படத்தொகுப்பு நடப்பு கல்வி ஆண்டில் (2020 – 2021) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. 11ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் கொண்ட தொகுப்பு பழைய பாடத்தொகுப்பாக உள்ளது. இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெறாமல் சேர்க்கை நடத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.