தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும். மேலும் காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.