ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து ஊட்டியில் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன.
உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கைகளில் கிருமி நாசினி வழங்கியும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து, தோட்டக்கலை துறையின் சார்பில் பூங்காவில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து பூங்காவினை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு பூங்கா ஊழியர்களை கொண்டு இதனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.