செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், 11 ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழு, அது பொதுக்குழு அல்ல. எடப்பாடி பழனிச்சாமிக்கு தூதி பாடுகின்ற கூட்டம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீதிமன்ற உத்தரவு எது வருகிறதோ.. அதன் அடிப்படையில் மீண்டும் பேசுவோம். ஜெயக்குமார் அவர்கள் பேசுகின்ற போது, ஒரு தகுதி தராதரம் இல்லாமல் பேசினார். இரண்டு மணி நேரம் நடக்கின்ற சர்க்கஸில், குழந்தைகளையும் – பெரியவர்களையும் சிரிக்க வைப்பதற்காக இரண்டு கோமாளிகள் வருவார்கள்.
அது போல ஒரு கோமாளி குடிகார கோமாளி, ஒரு கோமாளி இப்படிப்பட்ட ஒரு கோமாளி. இந்த இரண்டு கோமாளிகளும் சேர்ந்து அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமார் அவர்களுக்கு இந்த கூட்டம் மூலமாக ஒரு எச்சரிக்கையாகவே விடுகிறேன், பேசுவதை அளவோடு பேச வேண்டும். அண்ணன் ஓபிஎஸ்சை பேசுவதற்கு தகுதி, தராதாரம், எந்த யோக்கியதையும் இல்லாத ஜெயக்குமார்… ஒருங்கிணைப்பாளரை பற்றி பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் பேசுவார் என்றால்,
உதவி கேட்டு வருகின்ற பெண்களை மானபங்க படுத்தி, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் இருக்க வேண்டியவர் வெளியே நடமாடிக் கொண்டிருப்பதை நிச்சயம் அந்த பெண்கள் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு, அன்றைக்கு எடப்பாடி ஆட்சியில் இருந்த காரணத்தால், இவர் அமைச்சராக இருந்ததால் பெண்கள் வழக்கு யார் மீதும் போடாமல் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டார்கள்.இப்போது இவர் தொடர்ந்து இப்படி செய்வார் என்றால், இவர் செய்கின்ற தவறுகளை வழக்காக தொடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என்பதை ஜெயக்குமாருக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.