Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆபீஸ்ல கையாடல்… ஓங்கி அடித்த ஈபிஎஸ்… ஏமாந்து போன ஓபிஎஸ்… கோர்ட்டிலே செம அதிரடி …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தினுடைய சாவியை இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வசம்  ஒப்படைக்க உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய  உத்தரவுக்கெதிராக தான் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவாவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிஅரசர் டி.ஒய் சந்திர சூட் தலைமையிலான அமர்வு  விசாரணைக்கும் எடுத்துக் கொண்டது.

பதில் மனு:

அப்போது இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பதில் மனுவில்,ஓ. பன்னீர் செல்வம் கட்சியினுடைய அடிப்படை உறுப்பினராக  இல்லாத போது, அதிமுகவினுடைய அதிகார உரிமையை கோர முடியாது எனவும்,  கட்சியினுடைய தலைமை அலுவலகத்தினுடைய சாவியை தன்னிடம் ஒப்படைக்க கோருவதற்கு, ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.

கையாடல்:

ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பல விவகாரங்களில் கையாடல் நடத்தியுள்ளார் என்பதால், கையாடல் நடத்தியவர்களிடம் கட்சியின் அலுவலக சாவியை ஒப்படைக்க கூடாது,  ஒப்படைக்கவும் முடியாது.அதிமுகவினுடைய அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய தரப்பு ஆதரவாளருடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பொருட்களை சேதப்படுத்தி உள்ளார். இவ்வாறு கட்சிக்கு எதிராக நடக்கக்கூடிய ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது.

தள்ளுபடி:

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுகவின் அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில், பன்னீர் செல்வத்திற்கு பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றத்தினுடைய நீதி அரசர்கள் சந்திர சூட் எழுப்பியிருந்தார்.

பின்னடைவு:

அப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் அதிமுகவினுடைய தலைமை அலுவலகத்திற்கு எப்படி உரிமை கோருகிறார் என்ற கேள்வியை பன்னீர்செல்வம் தரப்புக்கு எழுப்பினார்கள். மேலும் பன்னீர்செல்வம் தரப்பிற்கு, நீங்கள் வேண்டுமென்றால் சிவில் வழக்கு வழக்கு தாக்கல் செய்து,  அலுவலகத்தை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவையும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் உடைய நீதியரசர் தள்ளுபடி செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள். இந்த உத்தரவு ஓபிஎஸ்சுக்கு பெரும் பின்னடைவையும், ஈபிஎஸ்சுக்கு பெரும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

சட்ட நடவடிக்கை:

இதே போல தான் தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுகவினுடைய அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினுடைய அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரம் என்பது நீதிமன்றத்தினுடைய உத்தரவுக்கு உட்பட்டது.

கேள்விகள்:

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் அதிமுகவினுடைய தலைமை அலுவலகச் சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் முடிவுகளானது தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை என வருவாய் கோட்டாட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் தான் நீதி அரசர்கள் பல்வேறு கேள்விகளை தமிழக அரசு எழுப்பி இருந்தார்கள்.

சாதாரண விஷயம் அல்ல:

அப்போது அதிமுகவினுடைய தலைமை அலுவலகம் கலவரம் தொடர்பாக ஒரு கட்சியினுடைய அலுவலகத்தை சீல் இடுவது என்பது எந்த வகையிலானது என்ற  ஒரு கேள்வியை தமிழக அரசுக்கு எழுப்பி இருந்தார்கள். மேலும் ஒரு அரசியல் கட்சியினுடைய அலுவலகத்தை சீல் இடுவது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல என்றும் நீதி அரசர் கருத்து ஒன்றை தெரிவித்தார்கள். ஒரு கட்சியினுடைய இருதரப்பும் மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்ட ஒழுங்கு சார்ந்த பிரச்சினை தான் என்றும், சட்ட ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்று நீதிஅரசர் கருத்து தெரிவித்து இருந்தார்.

சிவில் வழக்கு:

மேலும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றத்தினுடைய நீதி அரசர்கள் சந்திர சூட் எழுப்பியிருந்தார். அப்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் அதிமுகவினுடைய தலைமை அலுவலகத்திற்கு எப்படி உரிமை கோருகிறார் ? என்ற கேள்வியை எழுப்பிய நீதியரசர், நீங்கள் வேண்டுமென்றால் ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து, அலுவலகத்தை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்டித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |