செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித் தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி, எடப்பாடி அண்ணனோடு தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அதே போன்று கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்திலேயே பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றவர்கள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேருமே ஒன்றுகூடி நம்முடைய பொன்மனச் செம்மலுக்கு,
இதய தெய்வத்திற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சிக்கு ( 10.30 மணியிலிருந்து 11.30 மணி வரை) அனுமதி கேட்டும், அது மட்டுமல்லாமல் நினைவஞ்சலி செலுத்திய பிறகு, பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் நினைவிடம் மற்றும் புரட்சித்தலைவர் அம்மா அவர்களுடைய நினைவிடத்திற்கு அருகே காம்பவுண்டுக்குள்ளே… வளாகத்திற்கு உள்ளாகவே உறுதிமொழி எடுக்கின்ற நிகழ்வும் நடக்க இருக்கின்ற காரணத்தினால்,
24ஆம் தேதி அன்று காலை 10:30 மணியிலிருந்து 11:30 மணியளவில் எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்ற வகையில் நம்முடைய மாநகர காவல் துறை ஆணையர் இடத்திலேயே கடிதம் கொடுக்கப்பட்டது. அவரும் அதை பெற்றுக்கொண்டு உரிய வகையில் பாதுகாப்பும், அனுமதியும் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். எனவே புரட்சித் தலைவருடைய புகழுக்கு, புரட்சித்தலைவர் உடைய பொன்மனச் செம்மலுக்கு நினைவஞ்சலி செலுத்துகின்ற வகையிலே அனுமதி கோரி கடிதம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிட்டு… ஆயிரம் கொடுக்குறோம்னு கொடுக்காம இருந்தமா? இல்ல கேஸ் மானியம் கொடுக்காம இருந்தமா ? மீனவர்கள் கஷ்டப்படுறாங்க. இன்னைக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க. தொழிலுக்கு போக முடியாம இருக்கு. டீசல் மானியம் எதுவுமே கொடுக்காம இருக்காங்க. தேர்தல் வாக்குறுதியும் சொல்லிட்டு செய்யல.
எங்களை பொறுத்தவரை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ADMK வில் யாராக இருந்தாலும் உள்ளொன்று வைத்து புறம் ஒன்றும், அதேபோல ரெட்டை வேடம் போடுகின்ற சந்தர்ப்பவாதிகளாகவோ அல்லது நேரத்துக்கு நேரம் கலர் மாத்திக் கொள்கின்ற பச்சோந்திகளாகவோ நாங்க என்னைக்கு இருந்தது கிடையாது.