Categories
அரசியல் மாநில செய்திகள்

கொத்தாக சிக்கிய ADMK…! நடுங்க வைக்கும் ஸ்டாலின்.. கலைஞரை ஸ்கோர் செய்து கலக்கல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,  முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறுகின்ற சோதனை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தி எந்த ஆவணங்களும் கைப்பற்ற முடியாத நிலையில், மீண்டும் புதிதாக ஒரு வழக்குகளைபோட்டு, சோதனை என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி, அழிக்கலாம் என்று ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் அரசு நினைக்கின்றது.

ஸ்டாலின் ஆள தெரியாத முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கின்றார். முதல்வர் முக.ஸ்டாலினுடைய  தந்தை கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை கடைபிடித்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முன்னணி தலைவர்களை இந்த அரசு வழக்குகளை போட்டு அழித்துவிடலாம் என்று தப்பான கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழக அரசு, திரு.ஸ்டாலின் அவர்கள்..  தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள், அந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கு, வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்களுக்கும், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு திறன் இல்லாத, வக்கில்லாத, திறமை இல்லாதது  இந்த ஸ்டாலின் அரசு என ஆவேசமாக பேசினார்.

Categories

Tech |