தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்த விதிமுறைகளை அதிமுக தேமுதிக மீறியதால் தமிழகத்தில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று தேர்தல் ஆனது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்மேலும் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்
இதனையடுத்து அதிமுக அமைந்துள்ள மெகா கூட்டணி ஆனது தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் மனுக்களை அளித்து வருகிறது இதனை அடுத்துவடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் மூலக்கொத்தாளத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை அம்மண்டலத்தின் தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினி இடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடன் அளித்துள்ளார்
இதனை அடுத்து மனு அளிக்க வரும்பொழுது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்த விதிமுறைகளை மீறியதாக அதிமுக திமுக தேமுதிக மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கட்சியின் தொண்டர்கள் வரக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி அலுவலக பகுதிக்குள் தொண்டர்கள் நுழைந்துள்ளனர் கட்சிக்கொடிகள் இருக்கக் கூடாது ,மேளதாளங்கள் இசைக்க கூடாது போன்ற விதிமுறைகள் மீறப்பட்டன தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.