Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் கையில் ”ஆதாரம்”…! கொத்தாக சிக்கிய ADMK… பயத்தில் நடுங்கும் எடப்பாடி & மாஜிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ?

இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய அறிக்கையின் அடிப்படையில்,  நாங்கள் விசாரித்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்திருக்கிறார்கள். காலாவதி மருந்து வழங்கியதில் 27 கோடி முறைகேடு இ.எஸ்.ஐ யில் மட்டும்…  இதை மதுரையில் சென்று கண்டுபிடித்தோம், அறிக்கை கொடுத்திருக்கிறோம்.

மருத்துவ முன்னாள்  இயக்குனர் மற்றும்  அதிகாரிகள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு செய்யபட்டுள்ளது. இதே மாதிரி குவாரி ஆகட்டும், நெடுஞ்சாலை துறையாகட்டும்.  இன்னும் குறிப்பாக போனால்… போன வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்று ஆய்வு செய்தோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது ? 77 கோடி ரூபாய் மார்க் லிஸ்ட் அடிப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் எவ்வளவு பேர் கையெழுத்து போட்டுள்ளார்கள் ?

துணைவேந்தர் போட்டிருக்கிறார், பதிவாளர் போட்டிருக்கிறார், சிண்டிகேட் மெம்பெர் அப்ரூவ்ட் செய்திருக்கிறார்கள், அமைச்சருடைய ஈடுபாடு இருக்கிறது, எல்லாம் இருக்கிறது. ஆனால் யாரை பழிவாங்கினார்கள் ?  உமா என்கின்ற ”கண்ட்ரோலர் பைனான்ஸ்” அவர்களை மட்டும் பழி வாங்கினார்கள். முடித்து விட்டார்கள், அவர்கள் தற்கொலை செய்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள்… கொலை என்று சொல்கிறார்கள். இதே மாதிரி சீதாலட்சுமி எல்லாமே 50 வயதிற்குள் தான் இறந்து போயிருக்கிறார்கள்.

இது எதற்காக சொல்கிறேன் என்றால்,  குற்றங்கள் நடந்திருக்கிறது. இதை ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்களோ,  நீங்களும் நானோ கண்டுபிடித்து சொல்லவில்லை. ”கண்ட்ரோலர் ஆஃப் ஆடிட்டர் ஜெனரல்” சிஏஏ கொடுத்த அறிக்கை அடிப்படையில் தான் நாங்கள் ஒவ்வொருவரையா கேள்வி கேட்க போகிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லப் போகிறார்கள். இப்போது ஒட்டுமொத்தமாக பார்த்ததில் அரசு பணம் விரயம் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |