இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை… நாலு கடிதம் தந்திருக்கிறார்கள். அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார்.
மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு சிறப்பாக அவர்கள் கொண்டாடிட்டு இருப்பதாக தகவல் சொன்னார்கள். அதன் அடிப்படையில் இன்னைக்கு சட்டமன்றம் வராம இருக்காங்க என நான் நினைச்சுட்டு இருக்கேன், நாளைக்கு வருவாங்க.
அதிமுக விவகாரம் தொடர்பாக 4 கடிதம் வந்துள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ்சுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் சட்டமன்றத்தில் தான் அதற்கான பதிலை சபாநாயகர் சொல்ல முடியுமே தவிர, பொதுவெளியிலே செய்தியாளர்கள் பேட்டியில் சொல்வது பொருத்தமாக இருக்காது. நாளைக்கு சட்டமன்றத்தில் இதற்கான பதில் சொல்றோம்.