Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்து பார்த்து செஞ்ச ADMK…! ஒட்டுமொத்தமாக பந்தாடிய DMK… பட்டியல் போட்ட கொங்கு மண்டலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்திலேயே ஒன்றரை ஆண்டு காலமாக எந்த பணியும் செய்யவில்லை. ஆகவே இந்த சாலை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து கமிஷனரிடம் மனு கொடுத்தார்கள். நாங்கள் மூன்று பேர் மனு கலெக்டரிடம் கொடுத்தோம். ஒரு மீட்டிங் போட்டாரு. அதில் போய் கலந்து கொண்டோம்…  நான்கு மணி நேரம் பேசினோம்.

10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் இந்த சாலை அனைத்தையும் சரி செய்து விடுங்கள் என்று கூறினோம். எங்கள் பேச்சை கேட்க வில்லை. நாங்கள் உண்ணாவிரதம் அறிவித்து காவல் துறை கடிதம் பெற்ற பிறகு,  அமைச்சர் வந்த பிறகு ஆங்காங்கே  சரி செய்யும் பணி நடைபெற்றது. ஆனால் எங்களுக்கு முழுமையாக சாலைகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும், மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அதேபோல அம்மாடி அரசின் சார்பில் எடப்பாடியார் அறிவித்திருப்பத திட்டங்கள் அனைத்தும் செய்ய வேண்டும். அதே போல கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை,   மேட்டுப்பாளையம் மருத்துவமனை,  அனைத்து தாலுகா  மருத்துவமனையிலும் மருந்து இல்லை,  மருத்துவர் இல்லை  அவை எல்லாம் சரி செய்ய வேண்டும்.

கோவை மாவட்டத்திற்கு இந்த ஒன்றரை ஆண்டு எதுவும் செய்யவில்லை. இனியாவது இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று திமுக அரசனை வலியுறுத்தி கேட்க் கொள்கின்றோம். பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம், அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்தினோம்.

6 புதிய கல்லூரிகள் கொண்டு வந்தோம். புதிய தாலுக்கா அமைத்தோம், தாலுகா அலுவலகம் அமைத்தோம்,  கலெக்டர் ஆபீஸ் கட்டிக் கொடுத்தோம். எஸ்.பி ஆபீஸ் கட்டிக்கொடுத்தோம், அனைத்து யுனிவர்சிட்டி யும் கட்டிக்கொடுத்தோம், பேரூராட்சி கட்டி கொடுத்தோம்,  அரசு மருத்துவமனையை மேம்படுத்திய பிறகு,   தனியார் மருத்துவமனைக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்திக் கொடுத்தோம். கோவை மாவட்டத்துக்கு பார்த்து பார்த்து செஞ்சோம் என தெரிவித்தார்.

Categories

Tech |