அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் வீடியோ காட்சிகளை வைத்து 100 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பலரும் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருக்கக்கூடிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக நான்கு புகார்கள் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 7ஆம் தேதி சிபிசிஐடி போலீஸ்ஸார் நேராக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று கலவரம் எப்படி ஏற்பட்டது எனபது தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்கள். அப்போது கைரேகை நிபுணர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் முக்கியமான தகவல்கள் திரட்டப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கலவரம் ஏற்பட்ட அன்று அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தற்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணக்கூடிய பணிகளில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கலவரத்தில் முக்கியமாக ஈடுபட்டது யார் ? முதலில் கல் எறிந்தது யார்? என்னென்ன பொருட்கள் யார் சேத படுத்தப்படுத்தினார்கள் ? கார் கண்ணாடிகளை யாரு உடைத்தது ? தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?
எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ? என்று அடையாளம் காணக்கூடிய பணிகளை தொடர்ந்து சிபிசி டி போலீசார் செய்து வருகின்றனர். தற்பொழுதுவரை 100 நபர்களை அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த கலவரத்தின் முக்கியமாக தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் கொடுத்து, நேரில் அழைத்து விசாரணை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.