செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, அதிமுகவில் தேர்தலை நடத்த அதிகாரம் பெற்றது, தேர்தல் எப்பொழுது நடத்துவது என்று முடிவெடுப்பது பொதுக்குழுவிற்கு தான் இருக்கிறது. அது இபிஎஸ், ஓபிஎஸ் அவர்களால் 2017ல் உருவாக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிகளின் படியே. ஆனால் ஒரு செயற்குழு முடிவெடுத்து இந்த தேர்தலை நடத்துகிறது. அப்போ தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக, வேறு ஏதோ ஒரு அமைப்பு அந்த தேர்தலை நடத்தி இருந்தால் அது கட்சியை கட்டுப்படுத்தாது. இதை இவர்கள் யாருமே நீதிமன்றத்தில் சொல்லவில்லை.
அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற, ஆதரிக்கின்ற விரும்புகின்ற ஒரு தலைமையை அவர்கள் மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும். சின்னம் முடக்கப்படக்கூடாது, அண்ணா திமுக கட்சி தன்னுடைய அடையாளத்தை இழந்து விடக்கூடாது, இன்றைக்கு இவர்கள் பயணிக்கின்ற பாதை தேர்தல் ஆணையத்திற்கு செல்வார்கள். அண்ணா திமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் முடக்கப்படுகின்ற ஆபத்தான விளையாட்டை இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அது பாரதிய ஜனதா கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் சாதகமாக இருக்குமே ஒழிய அண்ணா திமுகவிற்கு சாதகமாக இருக்காது. சசிகலா அவர்கள் இந்த இயக்கத்தில் உறுப்பினராகவோ அல்லது ஏதேனும் ஒரு பொறுப்பில் தொடர்ந்து இதில் பயணிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளி, அண்ணா திமுக கட்சிக்கு தலைமை ஏற்று நடத்துவதை எந்த அண்ணா திமுக தொண்டர்களும் விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள், வாக்களிக்க மாட்டார்கள். மற்றபடி அவரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம் என தெரிவித்தார்.