Categories
அரசியல்

தேர்தல் குறித்து பேச கூட்டணி கட்சிகளுக்கு துணைமுதலவர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது அதிமுக

நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றனர் இதனை அடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து வருகின்றனர் திமுக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் அதிமுக தேசிய கட்சியான பாஜக கட்சியுடனும் கூட்டணி அமைத்து உள்ளது

இதனை தொடர்ந்து  பல தோழமை கட்சிகளுடன் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி கூட்டணி அமைத்து வருகின்றனர் இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது இன்று அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி ஒன்றையும் தொகுதி பங்கீடு மூலம் பெற்றுக் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை தொடர்ந்து திமுக தனது தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு காண பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது மேலும் தேர்தலுக்கான சூழ்நிலை என்பதே பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது மேலும் இந்த பணியை மேலும் சிறக்க  செய்வதற்காக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த கூட்டத்திற்கு தோழமை கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் அனைத்து தோழமைக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் இந்த கூட்டத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கருத்துக்கள் வெளியாகி வருகின்றன

 

Categories

Tech |