Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ”பளிச்”னு தெரியணும்… தமிழகம் முழுவதும் உத்தரவு… எடப்பாடி அதிரடி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளரை சந்தித்தார். வருகின்ற 17ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் அவருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தலைமை கழகத்தில் காலை 9 மணி அளவில் புரட்சித் தலைவர், இதய தெய்வம் மாளிகையில் உள்ள  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவை சிலைக்கும்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை அனுவித்து, மரியாதை  செலுத்தி, அதன்பின்பு தொண்டர்களை எல்லாம் சந்திக்கின்றார்.

இந்த ஒரு நிகழ்வு வருகின்ற 17ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு நடைபெறுகின்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு சுற்றைக்கை  மூலமாக ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். எங்கெல்லாம் அதிமுக  கொடிக்கம்பங்கள் இருக்கின்றதோ, அதையெல்லாம் வண்ணம் அடித்து, பளிச் என தெரியும் வகையில், புத்தொளிவு செய்யும் முறையில், அனைத்திந்திய அண்ணா திமுக  கொடி பறக்க வேண்டும் என்ற வகையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும் என்ற வகையிலும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. சென்னை பொருத்தவரை நம்முடைய அம்மா அரசு இருக்கும்போது, உயர்கல்வி மன்ற வளாகத்தில் அம்மாவுடைய திருவுருவுச்சலை அமைக்கப்பட்டு,  தினம் தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடையில் விடியா அரசு, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்ற பிறகு..  அதுக்கு பூட்டு போட்டுட்டாங்க. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நாங்களாவது பராமரித்துக் கொள்கின்றோம் என்று லெட்டர் எழுதி கேட்டோம், அதுவும் எங்களுக்கு கொடுக்கல. இப்போ PWD பராமரிக்கும் என சொல்லுறாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |