Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் இருக்குற வரை ADMK தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்: இணைப்பு வேலையை தொடங்கிய சசிகலா..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுகவின் தற்போது நடக்கும் நிகழ்வுகள் தொண்டர்களை சோர்வடைய செய்துவிடாதா ? என்ற கேள்விக்கு, நிச்சயமாக நான் இருக்கிற வரை தொண்டர்கள் சோர்வாக மாட்டார்கள். அதிமுகவை ஒன்றைணைப்பதற்கான பணியை நான் தொடங்கிவிட்டேன். அது ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படாமல், வேறு ஒரு கட்சியை பிரதான எதிர்க்கட்சியாக மாற்றும் வகையில் தமிழக சூழ்நிலை இல்லை.

பத்திரிக்கை…  youtube சேனல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறதையோ, இல்லாமல் இருப்பதையோ  நிர்ணயம் பண்றது இல்ல. அம்மா காலத்திலேயே இதனை நீங்க பார்த்திருப்பீங்க.  மக்கள்தான் முடிவு பண்ணனும்.  அவர்களுடைய முடிவு தான் என்னைக்கும் வெற்றியை கொடுக்கும்.புயல் வெள்ளத்தினால் விவசாயிகள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் கரும்பு ஒவ்வொரு வருஷமும் அம்மா தொடர்ந்து கொடுத்துட்டு இருந்தாங்க. விவசாயிகள் அரசாங்கத்த நம்பி இருந்தாங்க.

அரசாங்கம்  வாங்கலன்னு  இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவாங்க. அடிமாட்டு விலைக்கு வாங்குவாங்க.  அது நடக்கக் கூடாது என்பது தான் அம்மாவின் எண்ணம். அதனாலதான் ஒவ்வொரு ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்களுக்கும் ஒரு கரும்பு கொடுத்தாங்க. அதை கொடுங்கன்னு தான் நான் சொன்னேன்.  ஆனா அதை திமுக அரசு செய்யல.

விவசாயிகளிடம் கரும்பை அரசு வாங்கல   என்கிறபோது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை எல்லோருக்குமே பொதுவா சொல்றேன் எந்த அளவுக்கு அவங்களுடைய தேர்தல் அறிக்கையை இருந்துச்சு. ஆனா அவங்க நடந்துக்குற முறை என்ன என்கிறது ? இப்போ எல்லாருக்குமே வெட்ட வெளிச்சமா தெரியுது என தெரிவித்தார்.

Categories

Tech |