செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், அவரை எங்கள் கட்சியில் வருவாரா ? என்று கேட்பது, அவமதிப்பது போல் இருக்கிறது. நாங்கள் அம்மாவுடைய கொள்கைகளை, லட்சியங்களை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கே வாங்க வாங்க என்று யாரிடமும் பேரம் பேசவில்லை, விலை கொடுத்து வாங்குக்கின்ற கட்சி கிடையாது.
சின்னமா அதிமுகவை மீட்க சட்டப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழு சமயத்தில் அதுக்கு முன்னாடி ஒரு வாரமாக புழங்கிய அந்த பணத்தை எல்லாம் ஐடி பிடித்து இருந்தார்கள் என்றால் பல நூறு கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருமானமாக கிடைத்திருக்கும். அதுபோல திமுக தேர்தல் அறிக்கை சொன்னதெல்லாம் காற்றில் போய்க்கொண்டிருக்கிறது.
இரண்டு, மூன்று அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை வைத்ததற்கு, இன்னும் ஏழு மாதமாக பதில் சொல்லவில்லை, திமுகவுக்கும் , அதிமுகவுக்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் ஏதும் அக்ரீமெண்ட் ஆகியிருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு திராவிடனும் தலைகுனிகிற மாதிரி…. தேர்தல் நேர வாக்குறுதிகள் எல்லாம் செய்யாமல் ஏமாற்றுவது தான் திராவிட மாடல் என்று சொல்வது போல் எல்லாம் பேசுகிறார்கள் இது வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்.