Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவுக்கு பிடித்த நோய் எடப்பாடி… நல்ல டாக்டர் வச்சு காப்பாத்தணும்… நச்சுன்னு பதில் சொன்ன சசிகலா …!!

அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், இப்போது அது மாறிவிட்டதா ? மகளிர் ஆதரவு அதிமுகவுக்கு குறைகின்றது என்ற கேள்விக்கு, நான் வந்துட்டேன் எப்படி குறையும் ? நான் வந்துட்டா என எங்களுடைய மகளிரை மட்டும் சொல்லல நான்…  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள மகளிரையும் நான் சொல்றேன்.  எல்லாருக்கும் சொல்றேன். யாரையும் யாரும் விழுங்க முடியாது. அதெல்லாம் சும்மா வாய்க்கு சொல்லிட்டு போலாம். அந்த மாதிரி நிலைமை எல்லாம் கிடையாது.

அதிமுகவுக்கு பிடித்த நோய் எடப்பாடி பழனிசாமி. அதற்க்கு ஒரே தீர்வு ஓபிஎஸ் என ஓபிஎஸ் நடத்திய கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா,  என்னை பொறுத்தவரைக்கு நல்ல டாக்டர் இருந்தா நோயாளிகளை காப்பாற்றலாம். மக்களவை தேர்தலுக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு. நிச்சயமாக  இணைப்பை செய்வோம். நல்ல வெற்றியை பெறுவோம்.

அந்த வெற்றி கூட தமிழக மக்களுக்காக தான் சொல்றேன். எங்களை பொறுத்தவரைக்கும் நான் பயந்துகிட்டு ஓடி ஒளியுற ஆளு கிடையாது.  தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன வேண்டுமோ,  அதைக் கேட்டுப் பெறுவோம். அதை செய்ற  தைரியமும் இருக்கு, அந்த நம்பிக்கையும் இருக்கு.

அதிமுகவை இணைக்கணும் என நீங்க சொல்லுறீங்க. ஆனால் இணையாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தலைமை பொறுப்புக்கு வர நினைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, நான் சொல்றேன்ல..  ஒரு வீட்ல பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள். தாய் ஒண்ணுதானே. அது தான் நான் சொல்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |