இளம்பெண் ஒருவர் கோவிலுக்குள் வைத்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகையில் இளம்பெண் ஒருவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்று கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
மனித மிருகங்களுக்கு துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.