Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி! ஒரு சாவி இவ்வளவு தொகையா..? ஹிட்லர் உபயோகித்தது..!!

பிரிட்டனில் அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவி சுமார் 14000 பவுண்டிற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் ஒரு விமானி சுமார் 76 வருடங்களுக்கு முன்பு அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார். தற்போது அந்த சாவி கெண்ட் நகரில் 14 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் போயிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் Lieutenant A.A Williams என்ற விமானி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அதில் கடந்த 1945 ஆம் வருடத்தில் ஹிட்லருடைய மேசையின் டிராயரிலிருந்து உலோகத்தாலான, கழிவறை  சாவியை எடுத்ததாக எழுதியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த சாவி கடந்த 1980-90ல் லண்டனில் ஒரு சிறிய அருங்காட்சியகத்திற்கு வந்துள்ளது.

அப்போது அரிய வகை பொருட்களை சேகரிக்கும் ஒருவர் அதனை வாங்கியிருக்கிறார். அதை Ashford with C&T ஏலத்தில் அவர் விற்றிருக்கிறார். 300 பவுண்டுக்கு ஏலம் போகும் என்று அவர் கருதியுள்ளார். ஆனால் இந்த ஏலத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டின் ஏலத்தாரர்கள் அதனை வாங்க கடுமையாக போட்டியிட்டதால் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே 14,000 பவுண்ட்டிற்கு ஏலம் போனதால் அவர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

Categories

Tech |