தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்குப் பிறகு கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களையும் லோகேஷ் இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். திரையில் ஓரிரு நிமிடங்களே ரோலக்ஸ் கதாபாத்திரம் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டதால் விக்ரம் 2 திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் மையப்படுத்தி தனியாக ஒரு படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.