மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வருகின்றார். இவர் ஆடு மேய்த்து வருகின்றார். இந்நிலையில் மூதாட்டி அங்கு உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் மதுபோதையில் அங்கு வந்தார். இந்த நிலையில் சண்முகம் திடீரென்று மூதாட்டியை பலாத்காரம் செய்து அத்துமீறியதாக தெரிகிறது .
இதனால் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய உறவினர்கள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் சண்முகம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன்பின் உறவினர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து மூதாட்டியின் உறவினர்கள் சண்முகத்தை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.