Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்கச்சென்ற பெண்…. 2 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் 32 வயது மகளுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்தப் பெண் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வீட்டின் அருகில் உள்ள வடவாற்றின் கரையில் மேய்த்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற அந்த பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வடவாறு கீழக்கரையில் உள்ள ஒரு புதரில் அந்தப் பெண் காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவுளிப்பிரியா, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி போன்றோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு கரையில் கிடந்த மீன் பிடிக்கும் தூண்டில் கம்பியை கைப்பற்றினர். இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரை சந்தேகத்தின்படி காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்களான “பெரியசாமியும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் வடவாற்றில் தூண்டில் மூலமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வடவாற்றின் கரையில் அந்த பெண் தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தை அவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 நபர்களும் அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பரிதாபமாக கொன்றது” காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டரான கரிகால்சோழன் வழக்குப்பதிந்து பெரியசாமி மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Categories

Tech |