Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்ப்பதில் தகராறா…? 2 பேருக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் சோகம்….!!

ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள குறும்பனூரில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆறுமுகம் வசித்து வருகின்றார். இவருடைய பக்கத்து வீட்டில் விவசாயி வீரப்பன் வசித்து வந்தார். இதில் ஆறுமுகம் அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது வீரப்பனின் விவசாய நிலத்திற்கு பக்கத்தில் ஆறுமுகம் ஆடு மேய்த்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரப்பன் ஆறுமுகத்திடம் தட்டிக் கேட்டதால் . இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது அங்கு ஆறுமுகத்தின் நண்பர் சேது என்கிற தனசேகரன் வந்தார்.

அவர் ஆறுமுகத்துக்கு ஆதரவாகபேசியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அங்கு இருந்த வீரப்பனின் மகன்களான கார்த்தி, ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆறுமுகம் மற்றும் சேதுவை தாக்கினர். இதனை பார்த்து அங்கு வந்து ஆறுமுகத்தின் தரப்பினர் சிலரும் அவர்களைத் தாக்கினர். அப்போது இருதரப்பினரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களால் மோதி கொண்டனர். இந்நிலையில் கார்த்தி, ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சேதுவை கத்தியால் வெட்டினர். இதனால் கீழே விழுந்த சேது மீது அவர்கள் மேலும் கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.

இதேபோன்று ஆறுமுகத்துக்கு ஆதரவாக வந்தவர்கள் அரிவாளால் வீரப்பனை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதனை தடுப்பதற்காக வந்த வீரப்பனின் அண்ணன் மாதப்பன் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களில் சேது, வீரப்பன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இரட்டை கொலை குறித்து தகவலறிந்த சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து கொலை செய்யப்பட்ட சேது, வீரப்பன் ஆகிய இருவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மோதலில் அரிவாள் வெட்டுப்பட்ட மாதப்பன் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் கொலை நடந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு பெரும்பாலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |