Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுக்கம் வழியாக செல்ல சாலை ரெடி மலைகிராம மக்கள் மற்றற்ற மகிழ்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிய சாலை நிறைவுபெற்று போக்குவரத்து தொடங்க உள்ளதால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிதாக சாலை அமைக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

அதன் பின்பு மீண்டும் சாலை பணிகள் தொடங்கி தற்போது 95 விழுக்காடு முடிவடைந்து உள்ளதாகவும் நவம்பர் மாதத்தில் போக்குவரத்திற்காக முறைப்படி தமிழக அரசு திறக்க உள்ளதாகவும் நெடுஞ்சாலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |