கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு வரும் வரை காளஹஸ்தி கோவில் 2 மணி நேரம் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் நாளை முதல் ஊரடங்கு குறித்து அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தினமும் காலை 2 மணி நேரம் கோவில் திறக்கப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதை தடுக்க இத்தககைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காளஹஸ்தி கோவிலின் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜூ தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கோவிலில் ராகு கேது பூஜைகள் எதுவும் நடைபெறாது எனவும், அர்ஜித சேவைகள் அனைத்தும் பக்தர்கள் யாரும் இன்றி நடைபெறும் எனவும் கூறியுள்ளார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளனர்.