வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பத்தி ராயுடு பங்கேற்பார் என சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார் .
14 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடந்த 30வது லீக் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆடம் மில்னே வீசிய பந்தை அம்பத்தி ராயுடு எதிர்கொண்டபோது காயமடைந்ததால் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதையடுத்து அவருடைய எக்ஸ்ரே முடிவில் அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. என அணியின் தலைமை அதிகாரியின் காசிவிஸ்வநாதன் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்,” அம்பத்தி ராயுடு-க்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே முடிவில் எந்த ஒரு எலும்பு முறிவும் ஏற்படவில்லை. இதனால் அவர் அடுத்து நடைபெறும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து வருகிற 24-ஆம் தேதி சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.