Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்த டெஸ்டில் நான் விளையாடுவேனா என எனக்கு தெரியாது”….! ரஹானே ஓபன் டாக் ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நான் விளையாடுவது குறித்து   அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என ரஹானே கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவல் முடிந்தது இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக இப்போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அதே சமயம் 2-வது டெஸ்டில் விராட்கோலி அணிக்கு திரும்புவதால் அணியில் எந்த வீரர் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் .குறிப்பாக தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடும் ரோகித் , ராகுல் ஆகிய இருவரும் இல்லாததால் மயங்க் அகர்வால் –         சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக விளையாடி வருகின்றனர். இதேபோல் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகிறார்.

இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் ஒரு வீரர் கட்டாயம் அணியில் இருந்து வெளியேறி ஆக வேண்டும் .அதேசமயம் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 2-வது டெஸ்டிலும் அணியில் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். இந்நிலையில் இது குறித்து ரஹானே  கூறும்போது,” என்னால் முடிந்தவரை அணியின் நன்றாக வழி நடத்தி வந்தேன் .இது மிகச் சிறந்த போட்டியாக இருந்தது .நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடினர். 5-வது நாளில் கடுமையாக விளையாடினோம் .கடைசி நேரத்தில் போட்டி டிரா ஆனது .அதோடு         2-வது டெஸ்டில் விராட்கோலி அணிக்கு திரும்பும் போது, அப்போட்டியில் நான் விளையாடுவேனா என்பது மும்பை போட்டியின் போதுதான் தெரியும். இதுகுறித்து நிர்வாகம்தான் முடிவெடுக்கும் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |