லாரி டயர் வெடித்ததில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் இருந்து புறப்பட்ட சிமெண்ட் ஏற்றிய ஒரு லாரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பின்தொடர்ந்து பின்னால இரும்பு பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு லாரியும் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து ஆரல்வாய்மொழி ஆரோக்கிய நகர் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலிலிருந்து காவல்கிணறு நோக்கி செங்கல் ஏற்றுவதற்காக மற்றொரு லாரியும் வந்துள்ளது. அப்போது திடீரென சிமென்ட் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் அங்குமிங்குமாக சென்று எதிரே செங்கல் ஏற்ற சென்ற லாரி மீது மோதியது.
அதன்பின் பின்னால் இரும்பு பொருட்களை ஏற்றி வந்த லாரியும் இந்த 2 லாரிகள் மீது மோதியது. அப்போது அவ்வழியாக நாகர்கோவில் புறப்பட்ட கார் சாலை அருகில் நின்ற வேறொரு காரையும் லாரிகள் பயங்கரமா மோதியுள்ளது . இதனால் அந்தப் பகுதியில் நின்ற மக்கள் அடித்துப் பிடித்து ஓடினர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தியாகராஜ நகரை சேர்ந்த சுந்தரம், அவரது மகள் மேரி ஷகிலா, மேரி ஷகிலாவின் மகன்கள் பெனடிட், ஷயாம் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருபவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.