Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் இந்தி படங்கள்…. காரணம் என்ன?…. உண்மையை உடைத்த டைரக்டர் ராஜமவுலி…..!!!!

நடப்பு ஆண்டு இந்தியில் அதிக பட்ஜெட்டில் தயாராகிய சாம்ராட் பிரிதிவிராஜ், பிரம்மாஸ்திரா, குட்பை, ரன்வே 34, ஜெயேஷ்பாய் ஜோர்தார் உட்பட பல்வேறு படங்கள் தோல்வியடைந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. அமீர்கான் நடிப்பில் ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய “லால்சிங் சத்தா” திரைப்படத்துக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தோல்வி காரணமாக அமீர்கான் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில் இந்தி படங்கள் தோல்விக்கான காரணம் பற்றி நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட பல வெற்றி படங்களை எடுத்து பிரபலமான தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டி அளித்ததாவது ”இந்தி படங்கள் தயாரிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் வாயிலாக நடிகர்-நடிகைகளுக்கும், இயக்குனர்களுக்கும் பெரியளவில் சம்பளம் கிடைக்க துவங்கி உள்ளது. படத்தை எப்படி இயக்கினாலும் கைக்கு பணம் வந்துவிடுவதால் தாங்கள் நடிக்கும் (அ) இயக்கும் படங்கள் வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற நினைப்பு அவர்களிடம் குறைந்து விட்டது. இதன் காரணமாக தான் இந்தி திரைப்படங்கள் வெற்றியை அடைய முடியவில்லை”என்று பேட்டியளித்தார்.

Categories

Tech |