Categories
உலக செய்திகள்

அடுத்ததா அணு ஆயுதப்போருக்கு ரெடியாகும் உலகம் …. இந்த 2 நாடும் மும்முரமா தயாரிச்சிட்டு வராங்க …. வெளியான பகீர் தகவல் ….!!!

உலகம் அணு ஆயுதப்போருக்கு தயாராகி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை   எச்சரித்துள்ளது.

ரஷ்யா ,சீனா ஆகிய இரு நாடுகளும் அணு ஏவுகணை உட்பட பல ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றில், ரஷ்யா சீனா ஆகிய இரு நாடுகளும் கடந்த 10 வருடங்களாக தங்களுடைய அணு ஆயுதங்களை நவீனமயமாகி வருவதோடு,ஆயுதங்களை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகக் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடகொரியாவும் அமெரிக்கா நாட்டை தாக்கும் அளவிற்கு திறன் வாய்ந்த ஏவுகணை சோதனை செய்வதை அதிகரித்துள்ளது.

மேலும் ஈரானோ  ஓராண்டிற்குள் உடனடியாக அணு ஆயுதத்தை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கையில் வைத்துள்ளது. ஆகவே உலகின் பல பாகங்களில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எதிரிகள் இருப்பதால், நாடுகளுக்குள் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் இந்த அணு ஆயுத போர் உருவாகும் அபாயம் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை ஆவணம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |