குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் பெட்ரோல் கேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் இருக்கும் தனியார் உள்விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த போட்டியில் குத்துச்சண்டை வீரர் பாலிஷ் சதீஸ்வரர் என்பவர் இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்தார். அப்போது எதிரில் இருந்து நெருப்பு பந்து அவர் மீது தூக்கி வீச இதனை அவர் கையால் தடுத்து தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார்.
அந்த நேரத்தில் அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் சரிந்து நெருப்பு பந்து எரிந்த கொண்டிருந்த இடத்தில் சரிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கே தீப்பிடித்தது. இதில் ஒருவருக்கு கையில் தீப்பிடித்து எறிந்தது. தீயை அணைக்க முயன்ற போது தரை முழுவதும் தீ பரவியது. இதனால் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதை அடுத்து ஈரமான கோணியை வைத்து தீயை அணைத்தார்கள். இதன் காரணமாக அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.