குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக உலக நாட்டின் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மறுபுறம் மக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை உண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி மக்களும் தங்களது உணவு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, தற்போது மீண்டுள்ள இங்கிலாந்து அரசு அடுத்த கட்டமாக மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சூப்பர் திட்டத்தை கையில் எடுக்க உள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் தொலைக்காட்சியில் பாஸ்ட் புட் விளம்பரங்களுக்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. விளம்பரங்களைப் பார்த்து குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு பொதுமக்கள் சார்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.