கோவையில் குடியிருப்பு வளாகத்தில் காய்கறி விற்பனை நடைபெற்று வருவதால், சந்தைகளில் கூட்டம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தை பகுதிகளைத் தவிர்த்து மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள பள்ளி மைதானங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இங்கே பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச் சென்று வந்தனர். ஆனால் சில நாட்களாக இங்கு கூட்டம் குறைந்து காணப்படுகிறது அதற்கான காரணமாக வியாபாரிகள் கூறுவதாவது,
சந்தைகளில் இருந்து காய்கறிகளை வாங்கிச் சென்று பலர் வீதி வீதியாக நடமாடும் காய்கறிகளைக் கொண்டு விற்பனை செய்து வருவதாகவும், இதனால் சந்தைக்கு மக்கள் வரும் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து காய்கறி வியாபார சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், இங்கிருந்துதான் காய்கறிகளை வாங்கி கொண்டு தான் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வியாபாரிகள் எடுத்துச் சொல்கின்றனர்.
இங்கு வாங்கிச் சென்ற விலையை விட கூடுதலாக வைத்து தான் குடியிருப்பு பகுதிகளில் விற்பனையானது நடைபெறும். எனவே பொதுமக்கள் வீட்டு வாசலில் காய்கறி வருகிறது என்பதை கணக்கில் கொள்ளாமல், சந்தைக்கு வந்து வாங்கினால் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.