சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அம்மா கூறியதாக ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார்.
நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார்.
இதனையடுத்து, இவர் தற்போது தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ”நீ இப்போது எப்படி இருக்கிறாயோ அதற்கு மகிழ்ச்சியாக இரு. நாளை நீ என்னவாக இருக்க விரும்புகிறாயோ அதற்கு தொடர்ந்து போராடு” என தனது அம்மா கூறியதாக பதிவு செய்துள்ளார்.