Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி தலைமையில்” அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை  26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு  மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவை கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலங்களவை எதிர் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் மற்றும் திமுக எம்.பி டி.ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image result for குலாம் நபி ஆசாத்

கூட்டதிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், விவசாயிகளின் பிரச்சனை, வேலை வாய்ப்பின்மை, வறட்சி குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் ஜம்மு காஷ்மீரில், முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தாம் கேட்டதாக அவர் கூறினார்.

 

 

Categories

Tech |