கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்டுகிறது.
மேலும் 3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது.
கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். தமிகத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.