குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.
தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றது. கடந்த 7 நாட்களுக்கு முன்பாக நடைபெற வேண்டிய இந்த கூட்டம் இன்று நடைபெறுகின்றது .
இதில் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் எப்படி இருக்கின்றது . அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகள் என்ற மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் பற்றாக்குறை குறித்து பேச இருக்கிறார்கள். மேலும் குடிநீர் பற்றாகுறையை போக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிகின்றது.