திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
உடுமலை பழனி ஆண்டவர் நகரில் வசிக்கும் பழனிச்சாமி, திருநாவுக்கரசு குடும்பத்தார் ஏலச்சீட்டு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், கடந்த மாதம் பழனிச்சாமி இறந்துவிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டதற்கு வழக்கறிஞர்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.