ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மீட்டு வரப்பட்ட பெண் வீராங்கனைகள் சிலருக்கு சுவிட்சர்லாந்து புகலிடம் வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள சைக்கிள் பந்தய வீராங்கனைகள் உட்பட மொத்தம் 165 பேர் சர்வதேச சைக்கிள் பந்தயம் நடத்தும் அமைப்பின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து யூனியன் சைக்கிளிஸ்ட் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் தலைமையிடமானது சுவிட்சர்லாந்து நாட்டின் வைட் மாகாணத்திலுள்ள ஐஜேல் நகரத்தில் உள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட 165 ஆப்கான் அகதிகளில் 38 பேர் ஜெனிவா வந்துள்ளனர். அந்த 38 சைக்கிள் பந்தய வீராங்கனைகளுக்கும் தற்போது சுவிட்சர்லாந்து புகலிடம் வழங்கியுள்ளது.