Categories
Uncategorized தேசிய செய்திகள்

பழங்குடிகள் பயன்பெறும் வகையில் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் பழங்குடிகள் பயன்பெறும் வகையில் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதெற்கென மாநில அரசுகளின் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். காடுகளை உருவாக்குதல் காடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் அடங்கும் என கூறியுள்ளார். இதன் மூலம் காடுகள் தொடர்பான துறையில் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

பழங்குடி நலன் சார்ந்த 6 ஆயிரம் கோடி மதிப்பிலான மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட திட்டங்களுக்கான ஒப்புதல் 10 நாள்களில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் முத்ரா திட்டத்தில் ரூ.50000க்கு குறைவாக கடன் பெற்றவர்களுக்கு 2% வட்டி தள்ளுபடி செய்யப்படும். முத்ரா திட்டத்தில் வட்டிசலுகைக்காக ரூ.1,500 கோடி செலவிடப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.10,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |