Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய வைரஸ்…. இதுவும் மாற்றமடைந்து விட்டது…. செயற்கையாக உருவாக்கப்பட்ட தா….? எழுந்த புதிய சந்தேகம்…!!

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் மரபணுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன நாட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் சீனாவில் மிகப்பெரிய அளவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விரைவாக பரவியுள்ளது. இந்த பன்றிக்காய்ச்சலால் சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பன்றிகள் செத்து மடிந்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் தற்போது உருமாறிய புதிய வைரஸாக மாறியுள்ளது என சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் இயற்கையாகவே உருமாற்றம் அடைந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை விட தற்போது உருமாறி இருக்கும் புதிய வைரஸின் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய தகவல்கள் சீன கால்நடை அறிவியல் இதழில் ஆய்வு அறிக்கையாக வெளிவந்துள்ளது.

இந்த பன்றி காய்ச்சல் வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டடிருக்குமென சந்தேகம் எழுந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் ரிப்போர்ட் கூறுகிறது. இதில் பெரிய பிரச்சனையாக இருப்பது ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்று அறிகுறிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாகத்தான் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

Categories

Tech |