ஜெர்மன் ஊடக அமைப்புகள் அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு அமைப்பினரும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் ஊடக அமைப்பு அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் “இதுவரை ஜெர்மனி செய்தியாளர்களுக்காக பணிபுரிந்த உள்ளூர் ஆப்கான் அலுவலர்களை மீட்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களை ஜெர்மனிக்கு கொண்டு வருவதற்காக அவசர விசா வழங்கும் திட்டத்தை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையானது தலீபான்கள் காபூலை கைப்பற்றியதால் அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனிக்காக பணியாற்றிய உள்ளூர் செய்தியாளர்களை தலீபான்கள் பழிவாங்குவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் நாட்டை விட்டு வெளியேறும் செய்தியாளர்களையும் தலீபான்கள் துன்புறுத்தி கொலை செய்யவும் வாய்ப்புள்ளதால் உடனடியாக அவர்களை மீட்குமாறு ஜெர்மன் அரசிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று எழுதப்பட்டுள்ளது.